Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அரசு விதித்துள்ள தடை…. வெளிப்பிரகாரத்தில் நின்று தரிசனம்…. நடைபெற்ற நிகழ்ச்சி….!!

கொரோனா விதிமுறைகளால் முத்தாரம்மன் கோவில் வெளிப்பிரகாரத்தில் நின்று நேற்று (வெள்ளிக்கிழமை) பக்தர்கள் சுவாமியை தரிசித்து சென்றனர்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி தமிழக அரசு சனி, ஞாயிறு போன்ற நாட்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் முகூர்த்த நாளான நேற்று தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு பக்தர்கள் சென்றனர். அங்கு பக்தர்கள் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் நின்று அம்மனை தரிசித்து விட்டு சென்றனர். மேலும் கோவில்களில் பல திருமண நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

Categories

Tech |