சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு பகுதிகளில் மது விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் கோனேரிராஜபுரம் பகுதியை சேர்ந்த மூர்த்தி, மாரியம்மாள், லயன்கரையில் வசித்து வரும் தேவர் ஆகியோர் மது விற்பனை செய்தது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின் மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 57 மது பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.