Categories
அரசியல்

காஷ்மீரின் கலப்பு கலாச்சாரத்தை…. பாஜக உடைக்க நினைக்கிறது…. ராகுல் கடும் தாக்கு…!!!

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி ஜம்மு-காஷ்மீருக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் சென்றுள்ள நிலையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து பேசினார். அப்போது, காஷ்மீருக்கு வருவது தனது சொந்த வீட்டிற்கு வருவது போல் இருக்கிறது என்றும், தன்னுடைய குடும்பத்திற்கும் காஷ்மீருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்றும் கூறியுள்ளார். இந்த மக்களுக்கு தன்னால் முடிந்த வகையில் உதவிகளை கண்டிப்பாக செய்வேன் என்றும் எப்போதும் பொய் சொல்ல மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மக்கள் மத்தியில் அன்பு, சகோதரத்துவம், கலப்பு கலாச்சாரத்தை பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் உடைக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அன்பு மற்றும் சகோதரத்துவம் மீது அவர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். நீங்கள் பலவீனம் அடைந்ததால் மாநில உரிமையை மத்திய அரசு பறித்துக் கொண்டது. மாதா துர்கா, மாதா லக்ஷ்மி மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று சக்திகளும் ஒன்று சேரும் போது உங்களுடைய வீடும், நாடும் வளர்ச்சி பெறும். ஆனால் பாஜக அரசின் கொள்கைகளால் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு ஆகியவை மூலம் நாட்டின் வலிமை பாதிக்கப்பட்டுள்ளது” என்று அவர் பேசியுள்ளார்.

Categories

Tech |