பொக்லைன் எந்திரத்தில் சிக்கி ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூர் பாலாம்பிகை பகுதியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரிய ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டின் முன்பாக கொட்டப்பட்டிருந்த கற்களை பொக்லைன் எயந்திரம் மூலமாக சமன் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது பொக்லைன் எயந்திரத்தின் பின்புறமாக இருக்கும் கற்களை சமன் செய்து கொண்டிருக்கும் போது அவர் இருப்பதை கவனிக்காத பிரவீன் இயந்திரத்தை பின்புறத்தில் இயக்கியுள்ளார். இதனால் பொக்லைன் எந்திரத்தில் சிக்கி ராமலிங்கம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரவீனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.