Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கைவரிசை காட்டிய வாலிபர்கள்…. வெளிவந்த பரபரப்பு தகவல்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

பெண்ணிடம் தங்கச் நகையை பறித்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள போயம்பாளையத்தில் கருப்புசாமி-மாலதி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த ஜூலை மாதம் பங்களா ஸ்டாப் பேருந்து நிலையம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் மாலதி அணிந்திருந்த தங்க நகையை பறித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து கருப்புசாமி கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் மாலதியிடம் நகையை பறித்துச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த பாண்டி ஆகிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனையடுத்து அவர்களிடம் இருந்து 2 பவுன் தங்க நகையை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் 2 பேரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கடந்த வாரம் திண்டுக்கல் சிற்றரசன் கோட்டை பகுதியில் இதேபோன்று இருசக்கர வாகனத்தில் சென்று கணவன்-மனைவியை பின்தொடர்ந்து 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றது தெரியவந்தது. அதன்பின் 2 பேர் தங்க நகையை பறித்துவிட்டு உதயமூர்த்தி என்பவருடன் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்லும் வீடியோ வலைதளங்களில் வெளியாகியது. இதனைத்தொடர்ந்து 2 பேரும் திருப்பூரில் பதுங்கி இருந்ததாகவும், மோட்டார் சைக்கிளை திருடி அந்த மோட்டார்சைக்கிளில் சென்று நகைகளை கொள்ளை அடித்ததாகவும் அவர்கள் காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 2 பேரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |