ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்பு, அங்கு முதல் நாடாக பாகிஸ்தான், விமான சேவையை தொடங்கவுள்ளதாக தெரிவித்திருக்கிறது.
தலிபான்கள், கடந்த மாதம் 15-ஆம் தேதி அன்று, காபூல் நகர் உள்பட மொத்த நாட்டையும் கைப்பற்றிவிட்டார்கள். அதன்பின்பு, பிற நாட்டு படைகள் அங்கிருந்து வெளியேறியவுடன் காபூல் நகரின் விமான நிலையத்தையும் தலிபான்கள் கைப்பற்றினர். அதனையடுத்து, கத்தார் அரசு காபூல் நகரின் விமான நிலையத்தில், விமான சேவையை முன்பு போன்று தொடங்குவதற்கு உதவி செய்தது. அதன்பின்பே, அங்கு உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது.
இந்நிலையில், பாகிஸ்தானின் சர்வதேச ஏர்லைன்ஸ், வரும் வாரத்திலிருந்து, காபூல் நகருக்கு, இஸ்லாமாபாத்திலிருந்து விமான சேவை மீண்டும் தொடங்கவிருப்பதாக தெரிவித்திருக்கிறது. அதாவது, தலிபான்கள் நாட்டை கைப்பற்றிய பின், அதனுடன் பாகிஸ்தான், தான் முதல் நாடாக வெளிநாட்டு விமானச்சேவையை தொடங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.