நாளை நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் மாவட்டத்தில் மொத்தம் 295 மாணவ மாணவிகள் தேர்வு எழுத தாயராக உள்ளனர்.
மருத்துவ படிப்பிற்க்கான நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில் மாணவ மாணவிகள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் தேர்வுக்காக தங்களை தயார்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் 122 மாணவர்களும், அரசு உதவி பெரும் பள்ளிகளில் படிக்கும் 144 மாணவர்களும், மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் 28 மாணவர்கள் என மொத்தம் 295 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதவுள்ளனர்.
இதனையடுத்து கடந்த ஆண்டிலிருந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கல்வித்துறை மூலம் நீட் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு உதவும் வகையில் இணைய வழியில் ஆசிரியர்கள் மூலம் சிறந்த பயிற்சி அளித்து வந்துள்ளனர். எனவே இந்த ஆண்டில் அதிக மாணவர்கள் மருத்துவ கல்வி படிக்கும் வாய்ப்பு உள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்திய மூர்த்தி தெரிவித்துள்ளார்.