ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூல் நகருக்கு வரும் திங்கள் முதல் பயணிகள் விமானங்களை இயக்க உள்ளதாக பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தாலிபான்கள் கட்டுக்குள் வந்த நிலையில் அங்கிருந்து தங்களுடைய உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக மக்கள் விமான நிலையங்களில் குவிந்ததாலும், அடுத்தடுத்து குண்டுவெடிப்பு உள்ளிட்ட வன்முறைகளாலும் விமான நிலையம் சேதமடைந்தது.
இதனையடுத்து கத்தார் நாட்டின் தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியுடன் விமான நிலையம் சீரமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் இருந்து காபூலுக்கு வரும் திங்கள் முதல் பயணிகள் விமானங்களை இயக்க உள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.