நடிகை குஷ்புவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது .
தமிழ் திரையுலகில் கடந்த 1991-ஆம் ஆண்டு வெளியான சின்னத்தம்பி படத்தில் கதாநாயகியாக நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் குஷ்பூ . இதை தொடர்ந்து இவர் ரஜினி, கமல், கார்த்தி, மோகன் போன்ற பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Lady in Red.. power of red.. #DanceVsDance2 only on @ColorsTvTamil Soon!!!!! ❤️ pic.twitter.com/Zhd6mdbnxK
— KhushbuSundar (@khushsundar) September 11, 2021
மேலும் குஷ்பூ சமீபத்தில் உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறிய புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இந்நிலையில் குஷ்பு தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சிவப்பு நிற புடவையில் குஷ்பு போஸ் கொடுத்துள்ள இந்த அழகிய புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது .