மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் உள்ள மல்லிங்கர் தெருவில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சவுந்தர்யா என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த மாதம் 30ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனையடுத்து பலத்த காயமடைந்த மாணவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சவுந்தர்யா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற தேவாரம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். மேலும் மாணவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.