தமிழகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் முதல்வர் முக ஸ்டாலின் ஆட்சியில்தான் மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த ப.சிதம்பரம், அனைத்து வகையிலும் மக்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஆட்சியை முதல்வர் மு.க ஸ்டாலின் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. உள்ளாட்சித் தேர்தலிலும் இது எதிரொலிக்கும். மேலும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.