ஆடுகள் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் பகுதிக்கு அருகிலுள்ள பண்ணையார் குளம், உதயத்தூர், நக்கனேரி இளைய நயினார்குளம் உள்ளிட்ட கிராமங்களில் ஆடுகள் திருட்டு போனது. இதுகுறித்து ஆடுகளின் உரிமையாளர்கள் ராதாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ராதாபுரம் காவல்துறையினர் ஆடுகளைத் திருடிய மர்ம நபரை வலை வீசி தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் ஆடு திருடிய வழக்கு தொடர்பாக வைராவிகிணறு பகுதியில் சின்னத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜித்குமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் அஜித் குமாரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஆடுகளை திருடியது காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அஜீத் குமாரை கைது செய்ததோடு அவரிடமிருந்து ஆடுகளையும் மீட்டுள்ளனர்.