Categories
அரசியல்

பிரதமர் மோடிக்கு நன்றி கூறிய அண்ணாமலை…. காரணம் இது தான்…!!!

மகாகவி பாரதியாரை போற்றும் விதமாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று 14 அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11-ஆம் நாள் அரசின் சார்பாக இனி வருடந்தோறும் மாகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என அறிவித்தார். இதனையடுத்து இந்த நாளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் போட்டிகள் மற்றும் விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் அதில் இடம்பெற்றன. இந்நிலையில் இன்று மகாகவி பாரதியாரின் நூறாவது நினைவு நாளையொட்டி பிரதமர் மோடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், பாரதியாரின் 100வது நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழாய்வு இருக்கை நிறுவுவதாக அறிவித்ததையடுத்து தமிழக பாஜக தலைவர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, உலகின் மிக பழமையான மொழியான தமிழில் தாயகம் என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது. சுப்பிரமணிய பாரதியின் நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்து பல்கலைக்கழகத்தில் தமிழுக்காக சுப்பிரமணிய பாரதி பெயரில் தமிழாய்வு இருக்கை அமைக்கப்படும் என்று மோடி கூறியுள்ளார். இதற்கு நன்றி என்று கூறியுள்ளார்.

Categories

Tech |