Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“வரதட்சணை கொடுமை” பெண் அளித்த புகார்…. நீதிபதியின் தீர்ப்பு….!!

மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய தொழிலாளிக்கு ஒரு ஆண்டு சிறை காவல் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் சந்திப்பு பகுதியில் சின்னத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சின்னதுரை மற்றும் அவரது குடும்பத்தினர் பேச்சியம்மாளிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினர். இதுகுறித்து பேச்சியம்மாள் நெல்லை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2013-ம் ஆண்டு புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அந்த வழக்கு நெல்லை கோர்ட்டில் நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை நெல்லை கூடுதல் மகிளா கோர்ட் நீதிபதி ராஜேஷ்குமார் விசாரித்த நிலையில் சின்னத்துரைக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பேச்சியம்மாளுக்கு சொந்தமான 20 பவுன் நகைகளை அவரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், ரூ.2 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கினார்.

Categories

Tech |