Categories
அரசியல்

குஜராத்தின் புதிய முதல்-மந்திரி யார்…? பாஜக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை…!!!

குஜராத் மாநில முதல்-மந்திரி விஜய் ரூபாவானி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அடுத்த ஆண்டு இறுதியில் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திடீரென பதவி விலகி இருப்பது குஜராத் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனந்திபென் படேல்க்கு பின் 2016 முதல் குஜராத் மாநில முதல் மந்திரியாக பதவி வகித்து வந்தார்.  இதனையடுத்து தான் பதவி விலகியதற்கான காரணம் குறித்து விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர்கள் கட்சி அலுவலகத்தில் புதிய முதல்-மந்திரி நியமனம் செய்வது குறித்து ஆலோசனை நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை  மந்திரி மன்சுக் மாண்டவியா, துணை முதல்-மந்திரி நிதின் படேல், மாநில பாஜக தலைவர் சிஆர் பாட்டில் மற்றும் ரூபானி ஆகியோர் பங்கேற்றனர். இதில் எம்எல்ஏக்கள் அனைவரும் இரவுக்குள் காந்திநகர் வர உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அடுத்த முதல் மந்திரி யார் என்பது குறித்த முடிவு எம்எல்ஏக்கள் உடனான கூட்டத்துக்குப் பிறகு நாளை முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Categories

Tech |