கொரோனா தொற்று உறுதியாகி 30 நாட்களுக்குள் மரணம் நிகழ்ந்தால் மட்டுமே அது கொரோனா மரணமாக கருதப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட கொரோனா இழப்பீடு தொடர்பான மனுவுக்கு மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில் தற்கொலை, விஷம் பரவுதல் போன்றவற்றை தவிர்த்து கொரோனா உறுதியான நபர் 30 நாட்களுக்குள் மருத்துவமனையிலோ அல்லது மருத்துவமனையின் வெளியில் வீட்டிலோ இறந்து விட்டால் அது கொரோனா மரணமாக கணக்கில் கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.
மற்றபடி கொரோனாவிலிருந்து சரியான பிறகு நேரும் மரணங்கள் கொரோனா மரணமாக கணக்கில் கொள்ளப் முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. மத்திய அரசு கூறிய இந்த பதில் மனுவை உச்ச நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ளார்.