சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நீட்தேர்வு அச்சம் காரணமாக 19 வயது தனுஷ் என்ற மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூரை சேர்ந்த தனுஷ் என்ற மாணவன் நேற்று இரவு நீட் தேர்விற்காக படித்துக் கொண்டிருந்தான். மகன் படிப்பதை கண்ட பெற்றோர் மற்றொரு அறையில் உறங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை எழுந்து தனது மகனை பார்க்க சென்ற தாய்க்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
அங்கு தனுஷ் வீட்டில் உள்ள முற்றத்தில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு தாய் பெரும் அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நாளை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த தனுஷ் என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து நீட் தேர்வால் எங்கும் தற்கொலை நடக்கவே கூடாது. மாணவர்கள் யாரும் தவறான முயற்சியில் ஈடுபடவேண்டாம் என்று தமிழ்நாடு சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.