Categories
அரசியல்

முன்னாடியே எச்சரித்தேன்…. அப்ப என்னை என்ன சொன்னீங்க…? சீமான் கடும் பாய்ச்சல்…!!!

பாரதியார் நினைவு மற்றும் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி தன்னுடைய இல்லத்தின் முன்பு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், போர்டு ஆலைமூடப்படுவது குறித்து செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்து பேசினார். அப்போது, ஒரு டன் எடையுள்ள கார் தயாரிக்க 4 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. தடையற்ற மின்சாரம் நீங்கள் கொடுக்கிறீர்கள்.

ஒரு மணி நேரம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் அதற்கான இழப்பீடு மத்திய மாநில அரசுகள் ஈடுகட்டும் என்று நீங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளீர்கள். அவர்களுக்கு ஏற்றுமதி, இறக்குமதி வரி உற்பத்தி வரி எதுவுமே இல்லை. இந்த உள்கட்டமைப்பு என்கிறது  உள்நாட்டு முதலாளிகளுக்காகவோ, உள்நாட்டு சொந்த மக்களுக்காகவோ செய்யப்படுவதில்லை. அந்த நிறுவனங்கள் இல்லையென்றால் 4 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை என்று கூறுகிறீர்கள்.

ஆனால் இந்த ஹூண்டாய், போர்டு நிறுவன முதலாளிகள் எல்லாம் ஏன் அவர்களுடைய நாட்டில் தொழிற்சாலை தொடங்கி வேலை வாய்ப்பு கொடுக்கவில்லை? அந்த நாட்டில் எல்லா இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு கொடுத்து விட்டார்களா? இங்கே மட்டும் ஏன் வருகிறார்கள்? ஏனென்றால் இங்கே மனித உழைப்பு மலிவாக கிடைக்கிறது. நிலத்தடி நீர் எவ்வளவு வேண்டுமானாலும் உறிஞ்சிக்கொள்ளலாம். நிலம் கிடைக்கிறது. மின்சாரம் தடையின்றி கிடைக்கிறது.

ஏற்றுமதி, இறக்குமதி வரி கிடையாது. எங்கே எல்லாமே கிடைக்கிறது. மனித உழைப்பைச் சுரண்டி சுரண்டி உற்பத்தியை பெருக்க லாபத்தை பல ஆயிரம் கோடி ஈட்டுகிறது. இப்படியான முதலாளிகளால் அந்த நாடுகள் வளருமா? அல்லது வரும் சம்பளத்தை வாங்கி சாப்பிடுகிற என் நாடு வளருமா? என்று நான் அப்போதே கேள்வி எழுப்பும் போது என்னை என்னவாக பார்த்தீர்கள்? ஒரு பைத்தியக்காரனாக பார்த்தீர்கள். இவன் எதையாவது பேசிக் கொண்டிருப்பான். தேசத்துரோகி என்று பேசினீர்கள் என்று கடுமையாக பேசியுள்ளார்.

Categories

Tech |