Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சமாதானம் பேச வந்த பெண்…. தந்தை-மகனின் கொடூர செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

தகராறில் ஈடுபட்டவர்களை விலக்கி பிரச்சினையை முடிக்க வந்த பெண்ணை தாக்கி கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்திலுள்ள கருக்கை கிராமத்தில் சாரங்கபாணி என்பவர் வசித்து வருகிறார். இவர் மினி லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் குடிபோதையில் வீட்டிற்கு வந்த அவர் தன்னுடைய வீட்டிற்கு செல்லாமல் எதிரே இருக்கும் வீட்டின் கதவை தட்டியதாக தெரியவந்துள்ளது. இதில் கோபமடைந்த அந்த வீட்டில் வசிக்கும் தனபால் மற்றும் அவரின் மகன் சதீஷ்குமார் ஆகியோர் சாரங்கபாணியிடம் குடிபோதையில் இரவு நேரத்தில் வந்து ஏன் கதவை தட்டுறிங்க என கேட்டுள்ளனர். இதனால் இவர்களுகிடைய தகராறு ஏற்பட்டதால் தந்தை மகன் 2 பேரும் சேர்ந்து சாரங்கபாணியை தாக்கியுள்ளனர்.

இதனைப் பார்த்த அவரின் அண்ணி ராசாத்தி ஓடி வந்து தகராறை பேசி முடிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது கோபமடைந்த தனபால் மற்றும் சதீஷ்குமார் ராசாத்தியை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதில் மயங்கி விழுந்த ராசாத்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராசாத்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வெளியூர் செல்வதாக கூறிவிட்டு சென்ற தனபால் மற்றும் சதீஷ்குமாரை மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.

Categories

Tech |