டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்ததால் வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் இருந்து சேலம் மாவட்டம் வாழப்பாடிக்கு வெங்காயம் பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு மினி வேன் வந்து கொண்டிருந்தது. இதனையடுத்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னேரி தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் மினிவேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனால் வேன் டிரைவர், கிளீனர் ஆகிய 2 பேரும் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனர். அதன்பின் அவர்கள் 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.