தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் இன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அந்தந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என்று 40 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இந்த மையங்கள் மூலமாக 18 வயதிற்கு மேற்பட்ட 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சியில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு 5 முட்டைகள் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மோகனூர் அருகே ஆரியூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு 5 முட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.