Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. சிக்கி கொண்ட 5 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

16 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குப்பூர் கிராமத்தில் சச்சின் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கட்டிட தொழிலாளியாக இருக்கின்றார். இவருக்கும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த உறவினரின் மகள் ஒருவருக்கு குப்பூர் பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் 16 வயதான சிறுமிக்கு குழந்தை திருமணம் நடைபெறுவதாக சமூகநல அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சமூகநலத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது 16 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் நடந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதனையடுத்து ஊர்நல அலுவலர் ஜோதிமணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தை திருமணம் குறித்து புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி, சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா போன்றோர் குழந்தை திருமணம் நடத்திய இருவீட்டார் குடும்பங்களை சேர்ந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் மணமகன் சச்சின், அவருடைய பெற்றோர் மணி, வள்ளி, சிறுமியின் பெற்றோர் ஆகிய 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Categories

Tech |