அமெரிக்க அரசு வரும் அக்டோபர் மாதம் முதல் 5 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்படலாம் என்று தெரிவித்திருக்கிறது.
பைசர் தடுப்பூசி நிறுவனமானது 5லிருந்து 11 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் ஒப்புதல் பெற முடிவெடுத்துள்ளது. அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக டெல்டா வகை தொற்று பரவி வருகிறது. இந்நிலையில், குழந்தைகள் பள்ளி செல்ல தொடங்கியிருக்கிறார்கள்.
எனவே அக்டோபர் மாதத்திலிருந்து, சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த ஒப்புதல் பெறுவதற்கு Pfizer நிறுவனம் தீர்மானித்திருக்கிறது. இதனிடையே Moderna தடுப்பூசி நிறுவனத்திற்கு, ஐந்து வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான ஒப்புதல் நவம்பர் மாதத்தில் கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தென்னாப்பிரிக்க நாட்டில், சிறுவர்களுக்கு தடுப்பூசியளிக்க தொடங்கிவிட்டார்கள். இதில், முதல்படியாக சீன தயாரிப்பான சினோவாக் தடுப்பூசியை 2000 சிறுவர்களுக்கு செலுத்தி விட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.