பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளை அழைத்து வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கண்காணிப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 630 முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 65 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. இது தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இதில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்துள்ளார். அப்போது 65,000-க்கும் அதிகமான நபர்கள் தடுப்பூசி செலுத்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் அவர்களை முகாமிற்கு அழைத்து வந்து தடுத்து செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையர் சஞ்சயன் ஆர். சவான் கூறியுள்ளார்.
இதனையடுத்து இம்மாவட்டத்தில் 456 ஊரகப் பகுதிகளும் மற்றும் சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட 174 பகுதிகளும் என மொத்தமாக 630 இடங்களில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது என அவர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆய்வு கூட்டத்தில் ஆற்காடு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் திமிரி வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திலும் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதில் தடுப்பூசி இருப்பு மற்றும் முகாமிற்கு தேவைப்படும் தடுப்பூசிகள் கொண்டு வருகின்ற குளிர்சாதனப்பெட்டி தயார் நிலையில் இருக்கிறதா எனவும் மற்றும் பதிவேடுகளையும் அவர் ஆய்வு செய்துள்ளார்.