Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“ஸ்மார்ட் சிட்டி திட்டம்” தொடர்ந்து நடைபெறும் பணி…. அதிகாரிகளின் செயல்….!!

பேருந்து நிலையத்தில் பொக்லைன் எந்திரத்தின் மூலமாக பழைய கட்டிடம் இடிக்கும் பணியானது தொடர்ந்து நடைபெறுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 40 கோடி ரூபாய் செலவில் பராமரிப்பு பணிகள் தொடங்கி இருக்கின்றது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சத்தி ரோடு பகுதியில் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்காக போடப்பட்டிருந்த மேற்கூரைகள் இடித்து அகற்றப்பட்டது.

மேலும் தற்போது சத்தி ரோடு பகுதியில் உள்ள பழைய கட்டிடத்தை இடித்து அகற்றுவதற்கான பணியை மாநகராட்சி அதிகாரிகள் செய்துள்ளனர். எனவே அந்த கட்டிடத்தில் இயங்கி வந்த டீ, பழ கடைகள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கடைகள் காலி செய்யப்பட்டது. இதனையடுத்து இரும்பு தகரத்தால் ஆன கட்டிடம் மற்றும் நாமக்கல் பேருந்து நிறுத்தம் இடத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் 2 பொக்லைன் எந்திரத்தின் மூலமாக பழைய கட்டிடங்கள் இடித்து அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Categories

Tech |