குழந்தைகள் இறந்ததால் மன உளைச்சலில் இருந்த பெற்றோர் தற்கொலைக்கு முயற்சி செய்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கடம்பூர் கிராமத்தில் இருக்கும் தாய் வீட்டிற்கு மீனாட்சி தனது கணவன் மற்றும் குழந்தைகளுடன் வந்துள்ளார். அப்போது மீனாட்சி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கைலாசகிரி மலைக்கு சென்றுயுள்ளனர். அங்கு இருக்கும் குளத்தில் சிறுவர்கள் 2 பேரும் மீன் பிடிக்க சென்ற நிலையில் கால் தவறி குளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதில் குழந்தைகள் பெற்றோரின் கண் முன்னே இறந்ததால் தன்னால் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது என 2 பேரும் வாழ்க்கை வெறுத்து தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். இதனை அடுத்து ரயில் நிலையத்திற்கு வந்த 2 பேரும் குளிர்பானத்தில் விஷத்தைக் கலந்துள்ளனர். பின்னர் முதலில் லோகேஸ்வரன் விஷத்தை குடித்துள்ளார். அதற்கு பிறகு மனைவி குடிக்கும் போது அதை தட்டி கீழே கொட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மீனாட்சி தனது கணவரை அருகில் இருந்தவர்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி லோகேஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக உறவினர் மணிகண்டன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.