ஹிந்தி டிவி சீரியல் ஒன்றில் ஹீரோ கரப்பாம்பூச்சி கலந்த பாலை குடித்த காட்சி சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகின்றது.
இந்தியாவில் மட்டும் டிவி சீரியல்களுக்கு எப்பவுமே பஞ்சம் கிடையாது. அதிலும் பெரும்பாலான சீரியல்களில் காமெடியாக சில விஷயங்கள் நடக்கும். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. ஹிந்தி சீரியல் தில் சே தி துவா… சவ்பாக்கியவதி பவா என்ற சீரியலில் கரண்வீர் போரா என்பவர் ஹீரோவாக நடிக்கிறார். இதில் ஸ்ரீத்தி ஜா என்பவர் ஹீரோயினியாக நடிக்கிறார். இந்த சீரியலில் இருவருக்கும் முதலிரவு காட்சி வருகின்றது. அதில் மணப்பெண்ணும் மணமகனும் ரொமான்ஸ் செய்கிறார்கள். அப்பொழுது மணப்பெண்ணின் தோளில் ஒரு கரப்பான் பூச்சி வருகின்றது.
bc ye kya dekh li mene 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 pic.twitter.com/qMETQEoYaf
— afsana (@afsana2113) September 7, 2021
அதைப்பார்த்த கதாநாயகன் அதனை பிடிக்கிறார். பின்னர் கதாநாயகன் அந்த கரப்பான் பூச்சியை கொல்ல முயற்சி செய்கிறார், இதைப் பார்த்து பயந்து அந்த பெண் கரப்பான் பூச்சியை கொல்ல வேண்டாம் என்று கூறுகிறார். இதையடுத்து கதாநாயகன் அந்த கரப்பான் பூச்சியை பாலில் ஊற்றி அதை முழுவதுமாகக் குடித்து விடுகிறார். இதை பார்த்த மனைவி மயங்கி விழுகிறார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காட்சியை பார்த்த பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.