3 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் பகுதியில் சம்சுதீன், சுப்ரமணியன், கிஷோர் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் கஞ்சா விற்பனை, கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால் விக்கிரமசிங்கபுரம் காவல்துறையினர் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் இவர்களால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அந்தப் பரிந்துரையை ஏற்ற மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கிஷோர், சம்சுதீன் ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை பாளையங்கோட்டை மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கியுள்ளனர்.