மல்லித்தழை கட்டுக்குள் கட்டு விரியன் பாம்பு இருந்ததால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அடித்துப்பிடித்து ஓடினர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டில் வியாபாரியிடம் மல்லித்தழை கேட்டுள்ளார். இதனையடுத்து வியாபாரி அருகில் இருந்த மல்லித்தழை கட்டை எடுத்து பிரிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அதிலிருந்து கட்டுவிரியன் பாம்பு குட்டி ஒன்று வெளியே வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அடித்துப்பிடித்து ஓடினர்.
அதன்பின் வியாபாரிகள் சிலர் அந்த பாம்பினை அடித்துக் கொன்றனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறியபோது இதேபோன்று ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பும் ஒருமுறை மல்லித்தழை கட்டுக்குள் பாம்பு இருந்ததால் அதையும் வியாபாரிகள் அடித்து கொன்றனர். ஆகவே மறுபடியும் பாம்பு வந்ததால் எங்களுக்கு பயமாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.