தமிழகம் முழுவதும் இன்று 40 ஆயிரம் முகாம்கள் மூலமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 20 லட்சத்தை தாண்டி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்தது. இந்நிலையில் இலக்கை தாண்டி தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
மாலை 5 மணி நிலவரப்படி 20.11லட்சம் பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மெகா முகாம்கள் மூலம் மக்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இரவு 7 மணி வரை முகாம்கள் நடைபெற உள்ள நிலையில் 20 லட்சம் இலக்கு எட்டப்பட்டு விட்டது.