Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“ஆவணி கொடை விழா” நடைபெற்ற நிகழ்ச்சிகள்…. சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்….!!

மேல ஆழ்வார்தோப்பு ராமசாமி கோவிலில் நடைபெற்ற ஆவணி கொடை விழாவில் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடியில் மேலஆழ்வார்தோப்பு ராமசாமி கோவிலில் நடைபெற்ற ஆவணி கொடை விழாவில் பால்குடம், அபிஷேகம், அலங்கார பூஜைகள் சிறப்பாக நடந்தது. இதனையடுத்து தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து கொண்டுவரப்பட்டது. அதன்பின் வில்லிசை, நையாண்டி மேளம், கரகாட்டம் கொடை விழாவில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்துடன் ராமபிரான், சீதாபிராட்டி, லட்சுமண பெருமாள் பொன் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் காட்சி அளித்தார். இந்த வழிபாட்டில் பெரும்பாலான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். அதன்பின் விழாவின் இறுதியில் மஞ்சள் பால் பொங்கலிடுதல் நடைபெற்றது. இதனால் கோவிலில் மக்கள் பொங்கலிட்டு சுவாமியை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை மேல ஆழ்வார்தோப்பு ஊர் பொதுமக்கள் செய்து வைத்திருந்தனர்.

Categories

Tech |