Categories
கால் பந்து விளையாட்டு

அறிமுகமான முதல் போட்டியிலேயே …. அதிரடி காட்டிய ரொனால்டோ….!!!

மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு திரும்பிய ரொனால்டோ முதல் போட்டியிலேயே 2 கோல்கள்  அடித்து அசத்தியுள்ளார்.

போர்ச்சுக்கல் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரரான  கிறிஸ்டினோ ரொனால்டோ கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி வந்தார். இதன் பிறகு ரியல் மாட்ரிட் அணியில் இடம் பெற்ற அவர் சுமார் 9 ஆண்டுகள் விளையாடினார். இதையடுத்து  யுவான்டஸ் அணிக்காக விளையாடினர் .

இந்த நிலையில் ரொனால்டோ மீண்டும்  மான்செஸ்டர் யுனைடெட் திரும்பியுள்ளார். இதில் நேற்று நடந்த  நியூகேஸ்டில் அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் களமிறங்கிய ரொனால்டோ முதல் போட்டியிலேயே 2 கோல்களை அடித்து அசத்தியுள்ளார். இதில் அவர் (45+2) 62 நிமிடங்களில் கோல்களை  அடித்து அசத்தினார் .மேலும் மான்செஸ்டர் யுனைடெட் அணி  4-1  என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உள்ளது.

Categories

Tech |