தமிழகம் முழுவதும் இன்று 40 ஆயிரம் முகாம்கள் மூலமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்தது. இந்நிலையில் இலக்கை தாண்டி தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மாலை 5 மணி நிலவரப்படி 20.11லட்சம் பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மெகா முகாம்கள் மூலம் மக்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மெகா தடுப்பூசி முகாம் கொரோனா தடுப்பூசி கையிருப்பு உள்ள மையங்களில் இரவு 8.30மணிவரை தடுப்பூசிகள் செலுத்தப்படும் என தமிழக மருத்துவத் துறை அறிவித்துள்ளது. மெகா தடுப்பூசி முகாமில் தற்போது வரை 25 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.