Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காணாமல் போன இரும்பு கம்பி …. வசமா சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சாலைகள் அமைப்பதற்காக வைத்திருந்த கம்பிகளை திருடி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் மீளவிட்டான் 4-வது ரயில்வே கேட் அருகில் சாலை அமைப்பதற்காக 20 கிலோ எடையுள்ள இரும்பு கம்பிகள் வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த கம்பிகள் காணாமல் போய்விட்டது.

இதுகுறித்து தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்க்கும் தினேஷ்வர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் தூத்துக்குடி போல்டன்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் இரும்புக் கம்பிகளை திருடியது தெரியவந்தது. அதன்பின் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |