வெந்தயக் கீரை தோசை
தேவையான பொருட்கள் :
தோசை மாவு – 2 கப்
சீரகம் – 1 ஸ்பூன்
சோம்பு – 1/2 ஸ்பூன்
பூண்டு – 4 பற்கள்
வெந்தயக் கீரை – 1 கப்
எண்ணெய், உப்பு, மஞ்சள் தூள் – சிறிதளவு
செய்முறை:
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், சோம்பு, பூண்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த விழுதுடன் உப்பு , தோசை மாவு சேர்த்து கலந்து , தோசையாக வார்த்து அதன் மேல் நறுக்கிய வெந்தயக் கீரையைத் தூவி, சிறிது எண்ணெய் சேர்த்து வெந்ததும் எடுத்தால் சுவையான வெந்தயக் கீரை தோசை தயார் !!!