Categories
சினிமா தமிழ் சினிமா

அவர் தான் எங்க அப்பா… “தர்பாரில் பாருங்கள்”… போட்டுடைத்த நிவேதா தாமஸ்…!!

‘தர்பார்’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் குறித்த அட்டகாசமான அறிவிப்பை நடிகை நிவேதா தாமஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தர்பார்’. ‘சர்கார்’ படத்திற்குப் பிறகு முருகதாஸ் ரஜினியை வைத்து இயக்கும் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு காவல்துறை அதிகாரி கேரக்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினி தோன்றவுள்ளார்.

 Image

இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் ஷுட்டிங் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் படத்தின் ஷுட்டிங் முடிவடைந்தது.

Image

இந்நிலையில் தற்போது இப்படத்தில் ரஜினிக்கு மகளாக நடிக்கும் நிவேதா தாமஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தர்பார் படத்தில் ரஜினியின் கதாபாத்திரத்தின் பெயரை வெளியிட்டுள்ளார். அதில், இப்போது இந்த உலகம் தெரிந்துகொள்ள வேண்டியது இன்றைக்கும் என்றைக்கும் ஒரே ஒரு ஆதித்ய அருணாச்சலம் தான். அவர் தான் எங்க அப்பா. தர்பாரில் பாருங்கள் என்று தெரிவித்துள்ளார். இவரின் இந்த ட்வீட்டால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சமீபத்தில் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் நவம்பர் 7 ஆம் தேதி தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் வெளியாகும் என்று அறிவித்திருந்தார்.

Categories

Tech |