2 பாம்புகள் ஒன்றுடன் ஒன்று 15 நிமிடங்களா பின்னி பிணைந்து விளையாடியதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பத்ரகாளியம்மன் கோவிலின் பின்புறம் பகுதியில் குடகனாறு அமைந்திருக்கிறது. இந்த ஆற்றில் ஒட்டி இருக்கும் புதர் பகுதியில் 7 அடி நீளம் உடைய இரண்டு பாம்புகள் ஒன்றுடன் ஒன்று பின்னி விளையாடிக் கொண்டிருந்தது.
இதனை பொதுமக்கள் சிலர் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். இது குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் அதிகமானோர் அங்கு திரண்டு வந்து பாம்புகள் பின்னி விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்துள்ளனர். அதில் சிலர் தங்களது செல்போனில் பாம்புகளை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளனர்.