புடலங்காய் ரிங்க்ஸ்
தேவையான பொருட்கள் :
புடலங்காய் – 1
அரிசி மாவு – 3/4 கப்
சோள மாவு – 3/4 கப்
மைதா மாவு – 3/4 கப்
மிளகாய்த்தூள் – சிறிதளவு
மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – தேவைக்கேற்ப
ஓமம் – சிறிதளவு
உப்பு – சிறிதளவு
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் உப்பு, ஓமம் , மிளகாய்த்தூள், மிளகுத் தூள் , அரிசி மாவு , மைதா மாவு ,சோளமாவு மற்றும் தேவையான தண்ணீர் விட்டு, இட்லி மாவு போல் கரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் புடலங்காயை வில்லைகளாக நறுக்கி மாவில் தோய்த்து எடுத்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து , மிளகுத்தூள் தூவி பரிமாறினால் சுவையான புடலங்காய் ரிங்க்ஸ் தயார் !!!