வீட்டின் கதவை உடைத்து நகை,வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள திருமோகூர் பகுதியில் சேதுபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டில் சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அதன்பின் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர் வீட்டின் உள்ளே சென்று பீரோ இருந்த அறையை பார்த்ததில் அங்கு வைக்கப்பட்டிருந்த 2 1/2 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போனது சேதுபதிக்கு தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சேதுபதி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வெள்ளி பொருட்கள் மற்றும் நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.