பாரதியாரின் 100 வது நினைவு நாளான செப்டம்பர் 11-ஆம் நாள் அரசு சார்பாக இனி வருடந்தோறும் மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என்றும், அந்நாளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் போட்டிகள் நடத்தப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகம் வந்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியாரின் வாழ்வியலை விளக்கும் அரிய புகைப்படங்களை பார்வையிட்டனர்.
இதனையடுத்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மகாகவி பாரதியாரின் பாடலை மேற்கோள்காட்டி பள்ளி மாணவர்களுக்கு ஊக்கம் அளித்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் மகாகவி பாரதியாரின் மேற்கோள்காட்டி ஊக்கமளிக்கும் பள்ளி மாணவருக்கு பாஜக துண்டு அறிவிக்கப்பட்டிருப்பது தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னரே திட்டமிடப்பட்டு பள்ளி மாணவருக்கு பாஜக துண்டு அணிவித்து கூட்டி வந்துள்ளனர் என்றும் இதை பார்த்த பலரும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.
https://twitter.com/i/status/1436995536217784324