டெல்லியில் கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிக அளவு மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு ராஜஸ்தான் மற்றும் வங்காள விரிகுடா பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடைய உள்ளது. இதனால் தொடர்ந்து கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. இந்த மழை டெல்லி-என் சி ஆர், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பெய்யும் என கூறியுள்ளது. கடந்த 121 ஆண்டுகளில் இல்லாத வகையில் டெல்லியில் 24 மணி நேரத்தில் அதிக மழை பெய்துள்ளது.
கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிக அளவு மழை பொழிந்துள்ளது. கடந்த 1975ம் ஆண்டுக்கு பின்பு 1155 மி.மீ மழை டெல்லியில் பெய்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கடந்த 4 மாதங்களில் 1139 மி.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது. டெல்லி விமான நிலையம் உள்ளிட்ட பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள நீரின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளது.