Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய நாள் யாருக்கெல்லாம்.. “அதிர்ஷ்டம் தரப் போகுது”….? முழு ராசி பலன் …!!

நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம்,  ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம்.

மேஷம் :

எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் மேஷராசி அன்பர்களே…!! இன்று பால்ய நண்பர்களின் சந்திப்பால் பரவசம் அடையும் நாளாக  இருக்கும். ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். நீண்ட நாள் கனவு இன்று நனவாகும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் கூடுதல் செலவை சந்திக்க நேரிடும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது வேகமாகும். தேவையான பண உதவி கிடைக்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி காரணமாக உடல் சோர்வு உண்டாகலாம். சக ஊழியர்களுடன் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. இன்று குடும்பத்தில் அனைவரின் பேச்சுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.

இன்று ஓரளவு சிறப்பை கொடுக்கும் நாளாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். ஆசிரியரின் சொல்படி நடந்து கொள்வார்கள். சக மாணவர்களிடம் மட்டும் கவனமாக  நடந்து கொள்ளுங்கள். அது போதும். விளையாடும் போது கவனமாக நடந்து கொள்ளுங்கள்விளையாடுங்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் போது வெள்ளை நிற ஆடையோ  அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையோ எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். இன்று நீங்கள் சூரிய நமஸ்காரம் செய்து இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாகும். வெற்றி பெறும் நாளாக  இன்று இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்

ரிஷபம் : 

மற்றவரிடம் அன்பு காட்டக்கூடிய ரிஷபராசி அன்பர்களே…!! இன்று தொலைபேசி மூலம் நல்ல தகவல்கள் வந்து சேரும் நாளாக இருக்கும். நண்பர்களால் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். பழைய வாகனத்தை கொடுத்துவிட்டு புதிய வாகனம் வாங்கலாம் என்ற சிந்தனை மேலோங்கும். இன்று விடாமுயற்சியுடன் காரியங்களைச் செய்து சாதகமான பலன்களை பெறக்கூடும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். இதுவரை இருந்து வந்த தடைகள் விலகி செல்லும். எதிலும் முழு மூச்சுடன் ஈடுபடுவீர்கள். எல்லாவற்றிலும் இன்று சாதகமான பலன்களை நீங்கள் பெறக்கூடும். காரியங்களை அனுகூலமாகவே செய்வீர்கள்.

புத்தி தெளிவு ஏற்படும். மனதில் தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். மன குழப்பங்கள் நீங்கும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை பெறக்கூடும். அதுபோலவே முக்கியமான பணியை மேற்கொள்ளும்போதும்,  காரியத்தை மேற்கொள்ளும் போது சிவப்பு நிற ஆடை அல்லது சிவப்பு நிறத்தில் கைக்குட்டையை  எடுத்துச் செல்வது சிறப்பு. அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும். அது போலவே இன்று நீங்கள் விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டு இன்று நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான  திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்

மிதுனம் : 

எதிரிகளை தவிடுபொடியாக்கும் மிதுன ராசி அன்பர்களே…!! இன்று உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் அனைத்தும் கிடைக்கும். தன்னம்பிக்கையோடு இன்று பணிபுரிவீர்கள். குடியிருக்கும் வீட்டில் ஏற்பட்ட பிரச்சினைகள் விலகி செல்லும். தேக ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும் மனதில் மட்டும் இருக்கம் இருக்கும். கணவன்- மனைவி இடையே நெருக்கம் இருக்கும். அதே நேரத்தில் சின்ன சின்ன வாக்குவாதம் ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். பிள்ளைகள் மூலம் செலவுகள் இருக்கும்.

அவர்களது முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பீர்கள். பயணங்கள் செல்ல நேரிடும். உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. இன்று கூடுமானவரை கொஞ்சம் பொறுமையாக செயல்படுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியர்களின் சொல்படி நடந்து கொள்வீர்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கிய இடத்திற்கு செல்லும் போது வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்து சென்றால் சிறப்பாக இருக்கும். விநாயகரை வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் முன்னேற்றமான சூழலில் இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 5 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் பச்சை நிறம்

கடகம் : 

கண்ணியமிக்க கடக ராசி அன்பர்களே..!! இன்று மதிப்பும் மரியாதையும் உயரும் நாளாக இருக்கும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் பொருள் வரவை பெருக்கிக் கொள்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். இடம் பூமியால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருந்தாலும் முடிவில் லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் வசதிகளும் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரத்திற்கு புதியதாக இடம் வாங்குவீர்கள். காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன்கள் இன்று கிடைக்கும்.

சிக்கனமாக நடந்துகொண்டு பெரியோர்களின் ஆதரவு பெருவீர்கள். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது முக்கியமான காரியத்தை செய்யும்போது ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை  எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான  திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்

சிம்மம் : 

எந்த  ஒரு விஷயத்திலும் ஆராய்ந்து பார்த்து அதற்கு ஏற்றார் போல் செயல்படும் சிம்ம ராசி அன்பர்களே..!! இன்று இல்லத்திலும் உள்ளத்திலும் அமைதி கூடும் நாளாக இருக்கும். உங்களுடைய உடன்பிறப்புகள் உங்கள் கருத்துக்களுக்கு ஒத்து வரக் கூடும். ஆதாயம் தரும் வேலை ஒன்றில் அக்கறை காட்டுவீர்கள். இழுபறியாக இருந்த வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும். இன்று எதிர்பாராத நல்ல திருப்பங்களை சந்திக்க கூடும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறி செல்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மற்றவர்கள் பாராட்டக் கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள்.

மரியாதை அந்தஸ்து உயரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். இன்று நீங்கள் மனம் மகிழ்வாக காணப்படுவீர்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். இன்று  முக்கியமான காரியத்தை மேற்கொள்ளும் போது முக்கியமான பணிகளை மேற்கொள்ளும்போது ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைகுட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் விநாயகரை வழிபட்டு தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்

கன்னி : 

மற்றவர்களை எளிதாக கவரக்கூடிய கன்னிராசி அன்பர்களே..!! இன்று உங்களுக்கு வாக்கு சாதுர்யத்தால் வளம் காணும் நாளாக இருக்கும். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக நீங்கள் எடுத்த முயற்சி கைகூடும். இன்று பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டை விட்டு வெளியே தங்க நேரிடும். தேவையில்லாத வீண் செலவு ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். தந்தையின் உடல்நலத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். நண்பர்கள் உறவினர்களுடன் பகை உண்டாக கூடும். கவனமாக பேசுவது நல்லது. இன்று உடல்நிலையில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். காய்ச்சல் போன்றவை வரக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள்.

காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் ஓரளவு மன மகிழ்ச்சி ஏற்படும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். கூடுமான வரை பொறுமையாக செயல்படுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்தைச் செய்யும் பொழுது பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை  எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் விநாயகரை மனதார வழிபட்டு இன்று நாளை தொடங்கினால் அனைத்து விஷயங்களும் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்

துலாம் : 

மற்றவர்கள் வியந்து பார்க்க கூடிய அளவிற்கு நேர்மையான எண்ணம் கொண்ட துலாம் ராசி அன்பர்களே..!! இன்று அல்லல்கள் தீர்ந்து ஆனந்தம் பெருகும் நாளாக இருக்கும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களால் நன்மை கிட்டும். வெளியூர் பயணங்களின்போது பொருட்கள் மீது கவனம் இருக்கட்டும். உடல் ரீதியாக உபாதைகள் கொஞ்சம்  ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் செல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பது செல்வதன் மூலம் மன அமைதி கிடைக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவர்கள் எதிர்காலம் பற்றிய சிந்தனை எழும்.

கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவது பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். உடல் ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். இன்று செலவுகள் கூடும் நாளாகவே இருக்கும். மாணவர்கள் கல்வியில் ஓரளவு முன்னேற்றத்தை பெறக்கூடும். சகமாணவர்களிடம்  நீங்கள் அனுசரித்து செல்லுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் விநாயகரை மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால்  அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்

விருச்சிகம் : 

மற்றவர்கள் பார்வையில் ஒரு வித்தியாசமான கோணத்தை அணுகக்கூடிய விருச்சிக ராசி அன்பர்களே..!! இன்று பயணத்தால் உங்களுக்கு பலன் கிடைக்கும்.. தன்னம்பிக்கையோடு பணிபுரிவீர்கள். பிரபலமானவர்களின் சந்திப்பு கிட்டும். தொழிலில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரக்கூடும். இன்று திடீர் கோபம் வேகம் மட்டும் இருக்கும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மையை கொடுக்கும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும். வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடும். ஆகையால் எதிலும் பொறுமையாக செயல்படுங்கள்.

எதிலும் திருப்தி இல்லாத மனநிலை இன்று இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். பயணம் மூலம் ஓரளவு சாதகமான சூழல் இருக்கும். கடின போக்குவரத்து நன்மை கொடுப்பதாக இருக்கும். மாணவர்கள் இன்று கல்வியில் கொஞ்சம் கடினமாக உழைத்து பாடங்களை படிப்பது நல்லது. பாடங்களில் மட்டும் கவனம் செலுத்துங்கள். அது போதும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான  காரியத்தில் ஈடுபடும் பொழுது வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டை எடுத்துச் செல்லுங்கள். ஓரளவு வெற்றி வாய்ப்புகள் வந்து சேரும். அது போலவே காலையில் நீங்கள் விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டால் இன்று நாம் எடுக்கக்கூடிய காரியங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான  திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

தனுசு : 

மக்களின் நலனுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் தனுசு ராசி அன்பர்களே..!! இன்று உயரதிகாரிகள் உங்களுக்கு ஒத்தாசையாக இருப்பார்கள். வழக்கமாக செய்யும் பணிகளில் இன்று சில மாற்றங்களைச் செய்வீர்கள். இளைய சகோதரர்களால் நன்மை கிட்டும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். எந்த நெருக்கடியையும்  சமாளிக்கும் தெம்பும் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான  காரியங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் சுமையாக இருக்கும். நிதானம் இருக்கட்டும். சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள்.

இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். கூடுமானவரை நீங்கள் பொறுமையாக இருங்கள். அது போலவே படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள். இன்று உங்களுக்கு முக்கியமான வேலைகளை செய்யும் பொழுது முக்கியமான காரியங்களை எதிர்கொள்ளும்போது பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை  எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்து காரியமும் சிறப்பாக இருக்கும். வெற்றி வாய்ப்புகள் வந்து சேரும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் :  2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் பச்சை நிறம்

மகரம் : 

மற்றவர்களுக்கு உதவி செய்து மகிழ்ந்து கொள்ளும் மகர ராசி அன்பர்களே..!! இன்று பணத்தட்டுப்பாடு அகலும் நாளாக இருக்கும். நீங்கள் தேடிச் சென்ற நபர் தானே வந்து உங்களை சந்திக்க கூடும். அலைபேசி வாயிலாக அனுகூல செய்திகள் வந்து சேரும். தனலாபம் உண்டாகும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். இன்று குடும்ப விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு  எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது கருத்து வேற்றுமை வராமலிருக்கும். பிள்ளைகளிடம் கோபமாக பேசாமல் அன்பாக பேசுவது நல்லது. வாகன வசதி உண்டாகும். அடுத்தவரிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாகவே இருக்கும். எதிலும் நிதானம் மட்டும் இருக்கட்டும்.

அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைய கூடுதலாகத்தான் உழைக்க வேண்டியிருக்கும். படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பார்ப்பது சிறப்பை கொடுக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்தை மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிற ஆடை அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் நீங்கள் எழுந்ததும் விநாயகரை மனதார நினைத்து வழிபட்டு தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்

கும்பம் : 

எந்த ஒரு சூழ்நிலையிலும் மனதை தெளிவாக வைத்துக் கொள்ளும் கும்பராசி அன்பர்களே..!! இன்று தொட்டது துளிர்விடும் நாளாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் வாய்ப்பு உண்டாகும். வெளிநாட்டு முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று முன்னேற்றம் சீரான பாதையில் இருக்கும். எடுத்த பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம் கைக்கு வந்து சேரும். பொறுப்புக்கள் கொஞ்சம் கூடும். திறமைகளும் வெளிப்படும். வெளிநாட்டு பயணங்கள் ஏற்படும். உங்களை பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்துசேர்வார்கள். மேலிடத்தில் நெருக்கம் அதிகரிக்கும். மேலிடத்தில் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஒப்பந்தங்கள் நல்ல முறையில் வந்து சேரும். இன்றைய  நாள் நீங்கள் மகிழ்ச்சி கொள்ளும் நாளாக இருக்கும்.

மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியரிடம் நல்ல பெயர் எடுக்க கூடும். இன்று விளையாட்டிலும் உங்களுக்கு ஆர்வம் உண்டாகும். இன்று சில விஷயங்களைச் செய்யும்போது மிக பொருமையாகவே செய்யுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது இன்று முக்கியமான காரியத்தை செய்யும் பொழுது வெள்ளை நிற ஆடையில் செல்லுங்கள். அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை  எடுத்துச் செல்லுங்கள். அனைத்து விஷயமும் சிறப்பாக நடக்கும். முடிந்தால் காலையில் எழுந்தவுடன் விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய  நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

மீனம் : 

பொறுமையின் சிகரமாக திகழும் மீனராசி அன்பர்களே..!! இன்று அனைவரையும் அனுசரித்துச் செல்வதன் மூலம் ஆதாயத்தை காணும் நாளாக இருக்கும். குடும்ப சுமை மட்டும் கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியம் சீராக  ஆதாரத்தில் கட்டுப்பாடு வேண்டும். விரயங்கள் கூடுதலாகவே ஏற்படும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. இன்று தடைபட்டுக் கொண்டிருந்த காரியங்கள் சிறப்பாகவே நடைபெறும். பணவரவும் உங்களுக்கு கையில் வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தை மீண்டும் ஒருமுறை பேணிப் பாதுகாத்திடுங்கள். வீண் பகை உண்டாகலாம். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது. வாகனம் மூலம் செலவுகள் கொஞ்சம் இருக்கும். பயணம்  சுகம் கிடைக்கும்.

மரியாதையும் அந்தஸ்தும் கூடும். உறவினர் வருகை இருப்பதால் மனதில்  கவலை தோன்றாது. செலவுகள் மட்டும் இருக்கும். அதனால் பார்த்து அதற்கு ஏற்றார்போல் செய்வது நல்லது. தேவையில்லாத பொருட்களை தயவுசெய்து வாங்க வேண்டாம். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியரின் சொல்படி நடந்து கொள்ளுங்கள். சக மாணவரிடம் கொஞ்சம் ஒற்றுமையாக பேசுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது முக்கியமான காரியத்தை செய்யும்போது நீல நிற ஆடையில் செல்லுங்கள் அல்லது நீல நிறத்தில் கைக்குட்டையை  எடுத்து செல்லுங்கள். காரிய வெற்றி ஏற்படும். அதிகாலையில் விநாயகரை நீங்கள் மனதார நினைத்து வழிபட்டு தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |