Categories
தேசிய செய்திகள்

கோழிக்கோடு விமான விபத்திற்கு என்ன காரணம்…? விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!!

கடந்த ஆண்டு கேரள மாநிலம் கோழிக்கோடு விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பான காரணம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்டு 7ஆம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கிய போது ஏற்பட்ட விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பான அறிக்கையை விமான விபத்து விசாரணை அமைப்பு தாக்கல் செய்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு 7ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 190 பயணிகளுடன் இறங்குவதற்கு தயாரானது. ஆனால் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் விமானம் இரண்டாக உடைந்து 2 விமானிகள் உள்ளிட்ட 21 பேர் உயிரிழந்தனர்.

விபத்து குறித்த காரணமாக அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நிலையான வழிகாட்டு நெறி முறையை விமானி பின்பற்றாமல் இருந்ததே விபத்து ஏற்பட முக்கிய காரணமாக கூறப்பட்டது. மேலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இருப்பினும் சரியான வழிகாட்டி நெறிமுறைகளை விமானி பின்பற்றவில்லை என்பதை முக்கிய காரணமாக தெரிவிக்கப்பட்டிருந்தது. விமானி விமானத்தை தரை இறக்க ஒதுக்கப்பட்ட பகுதியை தாண்டி ஓடுகளத்தின் பாதி தூரத்தில் தரையிறக்கியதால் இந்த விமானம் விபத்துக்குள்ளானது என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

Categories

Tech |