தமிழகத்தில்நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக அரசு பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்திருந்தது. அதில் ஒவ்வொன்றாக தற்போது நிறைவேற்றி வருகிறது. அதில் ஒன்றுதான் இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்பதாகும். இந்நிலையில் ஸ்டாலின் பொறுப்பேற்று நான்கு மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இல்லத்தரசிகளுக்கான ஆயிரம் ரூபாய் திட்டம் செயல்படுத்தப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் தங்களுடைய கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இதுகுறித்து அதிமுகவினர் கூறுகையில், மாதந்தோறும் 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவோம் என்று திமுக அரசு தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டு அதை நிறைவேற்றாமல் அர்ச்சகர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளது. இதுதான் சொல்வது ஒன்று. செய்வது வேறொன்று என்பதோ? என்று கேள்வி எழுப்பியுள்ளது.