Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குடிக்கு அடிமையாகிய தந்தை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மன உளைச்சலில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியதுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள குலாளர் பகுதியில் காளிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி ஜீவா என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி படித்து வந்துள்ளார். இந்நிலையில் காளிராஜிக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக தெரியவந்துள்ளது. அதன்பின் அவர் தினமும் குடித்து விட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

இதனால் மகன் ஜீவா காளிராஜிக்கு அறிவுரை கூறியுள்ளார். இதனை மதிக்காமல் இருந்த தந்தையால் ஜீவா மன உளைச்சல் ஏற்பட்டு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜீவா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |