மகரம் ராசி அன்பர்களே.! எந்த ஒரு பணியையும் உங்களால் சிறப்பாக செய்ய முடியும்.
இன்று தனவரவு திருப்தி ஏற்படுத்தும் நாளாக இருக்கும். தடைகள் எல்லாம் உங்களை விட்டு விலகிச் செல்லும். புதிய நபர்களின் அறிமுகம் கண்டிப்பாக கிடைக்கும். கௌரவத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். வீடு மாற்றங்கள் விரும்பத்தக்க வகையில் நடைபெறும். ஆன்மீக சிந்தனையுடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரம் சிறப்பை ஏற்படுத்தும். தேவையான அளவில் பணவரவு இருக்கும். கடுமையான உழைப்பை செலுத்தி பணிபுரிவீர்கள். உபரி பணவரவு கிடைக்கக்கூடும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டு இருப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் போட்டிகள் கண்டிப்பாக விலகிச்செல்லும். தேவையான நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உற்சாகம் இருக்கும்.
எந்த ஒரு பணியையும் உங்களால் சிறப்பாக செய்ய முடியும். புது வாய்ப்பு கிடைத்தாலும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். காதலில் உள்ளவர்கள் கொஞ்சம் பக்குவப்பட வேண்டும். சூழ்நிலையை புரிந்து கொண்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டும். எதையும் பேசி பார்த்துதான் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். கோபப்பட வேண்டாம். மாணவர்கள் எப்படியாவது படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கி கொள்வீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை