நீட் தேர்விற்கு மத்திய அரசே காரணம் என்று ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் திமுகதான் காரணம் என்றும் மாறி மாறி பழியை தூக்கிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதில் அதிமுக நாங்களும் நீட்டுக்கு எதிராக சட்ட போராட்டங்கள் நடத்தினோம் என்று கூறி வருகிறது. சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தாலும் அதை ஏற்கும் முடிவு மத்திய அரசிடம் மட்டுமே இருக்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் முதல்வர் இன்று தீர்மானம் கொண்டு வர இருக்கிறார் என்று அமைச்சர்மா .சுப்பிரமணியன் நேற்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறுவதற்கான சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் ஆகிறது. எனவே அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக சட்டமுன்வடிவை ஆதரிக்க முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.