தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் நேற்று மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. அந்தந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என்று 40 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் ஒரே நாளில் 28.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இவ்வாறு தடுப்பூசி போடுவதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இனி வாரம் தோறும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் கேரள எல்லையோர மாவட்டங்களில் அனைவருக்கும் தடுப்பூசியை விரைந்து எடுப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.