நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறிய பின், சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது.
சட்டப்பேரவை நடப்பு கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்றைய அலுவல்கள் தொடங்கியது. அப்போது முதல்வர் முக ஸ்டாலின், ஜெயலலிதா இருக்கும்போது கூட நீட் தேர்வு வரவில்லை.. நீட் தேர்வு விலக்கு தொடர்பாக சட்ட முன் வடிவு கொண்டு வரப்பட உள்ளது.. இதற்கு எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கி, சட்டத்தை இணைந்து நிறைவேற்றித்தர வேண்டும்.. என்றார்..
இதனையடுத்து பேரவையில் நீட் தேர்வு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்..
முன்னதாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள், நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட தனுஷ் மறைவுக்காகவும், வாணியம்பாடியில் சமூக ஆர்வலர் வெட்டிக் கொல்லப்பட்டதற்காகவும் கருப்பு பட்டை அணிந்து சட்டப்பேரவைக்குள் வந்திருந்தனர்.. அதிமுக வெளிநடப்பு செய்ததால் சட்டப்பேரவையில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.