Categories
மாநில செய்திகள்

திமுக அறிக்கையால் மாணவர்கள் குழப்பம்…. எடப்பாடி பழனிசாமி….!!!!

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரும் மசோதாவை சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து பேசிய அவர், நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் விலக்கு பெறும் மசோதாவை அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்றி தரவேண்டும். அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு தொடரும் வகையில் மசோதா இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

இது குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கேள்விகள் எழுப்பி குற்றச்சாட்டை முன்வைத்தார். இதனால் முதல்வர் ஸ்டாலின் மற்றும் இபிஎஸ் இடையே விவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து திமுக அறிக்கையால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்ததை சுட்டிக் காட்டி தனது கருத்தை அவர் முன்வைத்துள்ளார்.

Categories

Tech |